மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது
அன்னவாசல் அருகே மோட்டார் சைக்கிள்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னவாசல் அருகே உள்ள அண்ணாநகர் புங்கினிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 45). இவர் தனது மோட்டார் சைக்கிளை தாண்றீஸ்வரம் பஸ் நிறுத்தம் அருகே நிறுத்திவிட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மர்ம ஆசாமி மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதேபோன்று பரம்பூரை சேர்ந்த வைத்திலிங்கம் (52) என்பவர் பரம்பூர் வங்கி அருகே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமி திருடி சென்றார். இதுகுறித்து அவர்கள் அளித்த புகாரின் பேரில் அன்னவாசல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில், பேராவூரணி செங்கமங்களம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் (28), மேலூர் சந்தைப்பேட்டை பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி (19) ஆகியோர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து திருட்டு போன 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.