கோவிலில் திருடிய 2 பேர் கைது
புவனகிரி அருகே கோவிலில் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரங்கிப்பேட்டை,
பரங்கிப்பேட்டை போலீசார் நேற்று காலை பொன்னந்திட்டு பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ந்த மோகன் (வயது 32), சுமன் (30) என்பதும், ஹரிராஜபுரத்தில் உள்ள கோவிலில் பித்தளை மணிகளை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.