மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் வி.மருதூர் ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 31). இவர் தனது மோட்டார் சைக்கிளை விழுப்புரம்- திருச்சி சாலையில் உள்ள இருசக்கர வாகன சர்வீஸ் மையம் அருகில் நிறுத்திவிட்டு வெளியில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர், விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், விழுப்புரம் அருகே காவணிப்பாக்கத்தை சேர்ந்த அப்பு என்கிற விஜய் (23), விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் கணேசின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.