கள் விற்பனை செய்த 2 பேர் கைது

நெகமம் பகுதியில் கள் விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-05-17 19:15 GMT

நெகமம்

நெகமம் பகுதியில் கள் இறக்கி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நெகமம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் சங்கீத்குமார் ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செங்குட்டைப்பாளையம் கக்கடவு பகுதியில் கள் விற்பனை செய்த தினேஷ் பிரபுராம் (வயது 25), என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் செங்குட்டைப்பாளையத்தில் கள் விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (55) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்