மது-லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
மது-லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குளித்தலை பெரியபாலம் பரிசல் துறை காவிரி ஆற்றுப்பகுதியில் குளித்தலை பிள்ளைதோப்பு தெருவை சேர்ந்த மணவாளன் (வயது 49) என்பவர் மது விற்றுக்கொண்டிருந்தார். இதையடுத்து அவரை குளித்தலை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 8 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. குளித்தலை பெரியபாலம் கடைவீதி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக குளித்தலை பிள்ளைதோப்பு தெருவை சேர்ந்த முகமதுஇஸ்மாயில் (43) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த ஆன்லைன் லாட்டரி சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.