மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
ராமநத்தம் அருகே மதுபாட்டில்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
ராமநத்தம்,
ராமநத்தம் அடுத்துள்ள பெரங்கியம் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா முருக்கன்குடியை சேர்ந்த நல்லமுத்து மகன் ராஜேந்திரன் (வயது 45), பெரங்கியம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் வேல்முருகன் (36) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 24 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.