சாராயம், கள் விற்ற 2 பேர் கைது
மரக்காணம் அருகே சாராயம், கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரம்மதேசம்,
மரக்காணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் ஜோசப் தலைமையிலான போலீசார் எம்.புதுப்பாக்கம் இந்திரா நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை(வயது 51) என்பவர் தனது வீட்டின் பின்புறம் 10 லிட்டர் எரிசாராயம் மற்றும் 5 லிட்டர் பனங்கள் ஆகியவற்றை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் சாரயம் மற்றும் பனங்கள்ளை பதுக்கி வைத்து விற்றதாக பள்ளிக்கூட தெருவை சேர்ந்த நாகராஜ்(41) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.