மது விற்ற 2 பேர் கைது; மொபட் பறிமுதல்

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-07-13 18:30 GMT

பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலத்தூர் தாலுகா, கொளத்தூர்-திம்மூர் பிரிவு ரோடு அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த நொச்சிக்குளம் மேலத்தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது 35), அன்பழகன் (46) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்கள் மற்றும் மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்