கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-06-25 19:44 GMT

சிவகாசி, 

சிவகாசி டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாவடிதோப்பு பகுதியில் 250 கஞ்சாவுடன் இருந்த அதேபகுதி யை சேர்ந்த முகமதுமீரா (வயது 40), நாகூர்மைதீன் (34) ஆகியோரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். டவுன் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தற்போது கஞ்சா மற்றும் புகையிலை விற்பனை அதிகரித்துள்ளது. சிலர் சிவன் கோவில் அருகில் உள்ள மாநகராட்சி கட்டிடம் மற்றும் ரத வீதிகளில் இரவு நேரங்களில் அமர்ந்து கஞ்சா புகைக்கிறார்கள். மேலும் ஜானகி அம்மாள் ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலும் இளைஞர்கள் இரவு நேரங்களில் கஞ்சா பயன்படுத்துகிறார்கள். மேலும் சிவகாசி பகுதியில் உள்ள பல பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஆதலால் சிவகாசி டவுன் போலீஸ் நிலைய போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி குற்றச்சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்