கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-10 19:10 GMT

சிவகாசி, 

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் முனியசாமி கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த பார்த்தீபன் (வயது 50) என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 50 கிராம் கஞ்சா இருந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் விற்பனை செய்ய கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக பார்த்தீபன் தெரிவித்துள்ளார். இதை தொடாந்து பார்த்தீபனை திருத்தங்கல் போலீசார் கைது செய்தனர். இதேபோல் ரெயில்வே கேட் அருகில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த முனீஸ்வரன் காலனியை சேர்ந்த சுப்புராஜ் மனைவி மகாலட்சுமி (33) என்பவரை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். இதில் மகாலட்சுமி வைத்திருந்த பையில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அதனை பறிமுதல் செய்த போலீசார், மகாலட்சுமியை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்