கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-24 18:36 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா சோமசுந்தரம் ஆலோசனையின்படி ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்டறிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாத்தூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் துரத்தி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அவர்களிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில், அவர்கள் கல்லாத்தூர் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த மேகநாதனின் மகன் அகிலன்(வயது 21), அவருடைய நண்பர் ஆண்டிமடம் முன்னூரான்காடுவெட்டி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த துரைராஜின் மகன் கார்த்திக் (23) என்பதும், அவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்