சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேர் கைது

ராமநாதபுரம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-24 18:52 GMT

ராமநாதபுரம் அருகே ஆர்.காவனூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் தேன்மொழி, வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோருடன் அங்கு சென்றார். அப்போது அந்த பகுதியில் எந்தவித அனுமதியின்றி பதிவு எண் இல்லாத டிராக்டரில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். காளவாசல் தொழிலுக்காக சட்டவிரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணலுடன் வாகனத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுதொடர்பாக ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து ஆர்.காவனூர் கிழக்குத்தெருவை சேர்ந்த சின்னாள் மகன் மலைராஜ் (வயது 63), நடுத்தெருவை சேர்ந்த ராமு மகன் கருப்பையா (60) ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பாக வாகன உரிமையாளர் ஆர்.காவனூர் கல்பனா, ஆசாரிமடம் கோகிலா ஆகியோரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்