முன்விரோத தகராறு 2 பேர் கைது

சங்கராபுரம் அருகே முன்விரோத தகராறு 2 பேர் கைது

Update: 2023-01-23 18:45 GMT

சங்கராபுரம்

சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மணிகண்டன்(வயது 31). இவர் சம்பவத்தன்று பொங்கல் பண்டிகைக்காக கடுவனூரில் உள்ள தனது சின்ன மாமனார் சங்கர் வீட்டுக்கு சென்றார். அப்பொழுது வீட்டுமனை சம்மந்தமான முன் விரோதம் காரணமாக சங்கரிடம் கடுவனூரை சேர்ந்த அவரது அண்ணன் குப்பன் தனது ஆதரவாளர்களுடன் தகராறு செய்ததோடு இதை தடுக்க முயன்ற மணிகண்டனை அசிங்கமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

பின்னர் இது குறித்து இரு தரப்பினரும் சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்தனர். இதில் மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த குப்பன்(46), அமுதா, ரவி, அஜித்குமார்(27) ஆகிய 4 பேர் மீது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குபதிவு செய்து குப்பன், அஜித்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதே போல் குப்பன் மனைவி அமுதா கொடுத்த புகாரின் பேரில் கடுவனூர் கிராமத்தை சேர்ந்த சங்கர், மஞ்சுளா, முத்துராஜ் மற்றும் மணிகண்டன் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்