கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது
கிராவல் மண் அள்ளிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாட்டை அடுத்த போலம்பட்டியில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது பொக்லைன் எந்திரம் மூலம் கிராவல் மண் அள்ளிய வரதக்கோன்பட்டியை சேர்ந்த சின்னத்தம்பி(வயது 29), வையாபுரி காட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 டிராக்டர் டிப்பர் பறிமுதல் செய்யப்பட்டது.