தக்கலை,
தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை, பூச்சிக் காட்டுவிளையை சேர்ந்தவர் ஜாண்சஜின் (வயது24). இவர் பன்றிகளை விலைக்கு வாங்கி இறைச்சிக்காக விற்பனை செய்துவருகிறார். சம்பவத்தன்று 4 பன்றிகளை வாங்கி வந்து அவரது பழைய வீட்டில் இரவில் கட்டியிருந்தார். அப்போது அவற்றில் 3 பன்றிகளை மர்ம நபர்கள் வெட்டி கொன்றுவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அவர் தக்கலை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி பன்றிகளை வெட்டி கொன்றதாக பெரியவிளை காலனியை சேர்ந்த சுபின் (26), காட்டாத்துறை, ஈச்சவிளையை சேர்ந்த ஷிபின் (24) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.