வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது
முக்கூடல் அ்ருகே வியாபாரியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
முக்கூடல்:
முக்கூடல் அருகே உள்ள தாளார்குளத்தை சேர்ந்தவர் மிக்கேல் ராயப்பன் (வயது 48). பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முக்கூடல் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் பனை ஓனை வியாபாரம் செய்து வந்தார். அப்போது வியாபாரம் செய்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து முக்கூடலை சேர்ந்த முருகப்பெருமாள் என்ற பழனி (35) மற்றும் முத்துக்குமார் (36) மற்றும் இருவர் சேர்ந்து மிக்கேல் ராயப்பனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர். அப்போது தகராறை தடுக்க முயன்ற அவரது உறவினர் மேரிஸ் ராஜாவையும் அடித்து மிரட்டினர்.
இதுபற்றி மிக்கேல் ராயப்பன் முக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்வின் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி முருகப்பெருமாள் மற்றும் முத்துக்குமார் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள்.