பெயிண்டரை தாக்கிய 2 பேர் கைது

பெயிண்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-11 19:18 GMT

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 35). பெயிண்டரான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனாரான முருகேசனுக்கும்(45) இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரூர் திரு.வி.க. சாலையில் முருகேசன், ராஜேஷ்(21), அருண்(21), மற்றொருவர் என 4 பேர் ஒன்று சேர்ந்து கார்த்திகை திட்டி தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விதுன்குமார் வழக்குப்பதிவு செய்து முருகேசன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து தப்பி ஓடிய மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்