கயத்தாறு:
கயத்தாறு புதிய பஸ் நிலையத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர் சங்கர் (வயது 33). இவர் புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வந்தார். இதேபோல் கீழபஜாரில் மணி (35) என்பவர் புகையிலை பொருட்கள் விற்று வந்தார். கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து நேரில் சென்று புகையிலை பொருட்களை கைப்பற்றி 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.