2 மயில்கள் மர்ம சாவு
எடப்பாடி அருகே வையாபுரி காட்டுவளவு பகுதியில் 2 மயில்கள் மர்மமாக செத்து கிடந்தன
எடப்பாடி:
கோரணம்பட்டி ஊராட்சி ராயணம்பட்டியை சேர்ந்தவர் சித்தன் (வயது 50). இவருக்கு சொந்தமான விவசாய நிலம் வையாபுரி காட்டுவளவு பகுதியில் உள்ளது. நேற்று அந்த நிலத்தில் 2 மயில்கள் மர்மமாக செத்து கிடந்தன. தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று, மயில்களின் உடல்களை கைப்பற்றினர். மேலும் சித்தன் விவசாய நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட ராகி பயிரில் மருந்து தெளிக்கப்பட்டதால், அதை தின்று மயில்கள் இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அவரிடம் வனத்துறையினர், போலீசார் விசாரித்து வருகிறார்கள்.