கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது
மருமகனை மாமியார் கொன்ற வழக்கில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலக்கோடு:-
பாலக்கோடு அருகே அண்ணாமலைஅள்ளி அரசு மதுபான கடை முன்பு கடந்த 19-ந் தேதி ஒருவர் இறந்து கிடந்தார். பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் தேன்கனிக்கோட்டை அருகே கருக்கனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சூரியா (வயது 41) என்பது தெரிய வந்தது. மேலும் சூரியாவை, அவருடைய மாமியார் சகுந்தலா (41) என்பவரே கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரிய வந்தது. அதாவது, தன்னுடைய மது அருந்திவிட்டு வந்து தன்னுடைய மகளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததால் சூரியாவை கொலை செய்ததாக சகுந்தலா போலீசில் கூறி இருந்தார். இதற்கிடையே சூரியா கொலை தொடர்பாக கூலிப்படையை சேர்ந்த காரிமங்கலம் சொன்னம்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (24), கிருஷ்ணகிரி மாவட்டம் தேவீரஅள்ளியை சேர்ந்த ஜனார்த்தனன் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.