கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு...!

11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்திருந்தனர்.;

Update: 2024-01-05 08:30 GMT

சென்னை, 

பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்' தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலமாக, மாநிலம் முழுவதும் 1.13 கோடி பயனாளிகளுக்கு ஒவ்வொரு மாதமும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்ததிட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி 11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்திருந்தனர். தற்போது இந்த மனுக்களில் 2 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்த மாதம் வழங்கப்படவுள்ள மகளிர் உரிமைத்தொகையில் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உரிமைத்தொகை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.15 கோடியாக அதிகரித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்