ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.2¼ லட்சம் திருட்டு

ஓய்வு பெற்ற ஆசிரியரிடம் ரூ.2¼ லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர்

Update: 2023-01-07 20:45 GMT

மேலூர்,

மேலூர் அருகே உள்ள மேலவளவை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பழனியப்பன் (61). இவர் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை அவரது இருசக்கர வாகனத்தில் இருக்கைக்கு அடியில் வைத்துக்கொண்டு மேலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி முன்பு வாகனத்தை நிறுத்தி சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது பணம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்