2 கிலோ, 5 கிலோ இலகு ரக சிலிண்டர் திட்டம் - அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்

2 கிலோ, 5 கிலோ இலகு ரக சிலிண்டர் திட்டத்தை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-10-06 14:07 GMT

சென்னை,

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், 2 கிலோ மற்றும் 5 கிலோ இலகு ரக சிலிண்டர்களை தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் சிறு வியாபாரிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் ஐந்து சுயசேவைப் பிரிவுகள் மூலம் இந்த கேஸ் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளது.

இடம் பெயரும் தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கு வகையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இரண்டு கிலோ மற்றும் ஐந்து கிலோ கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வருகிறது.

2 கிலோ கேஸ் சிலிண்டருக்கு 'முன்னா' எனவும், ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருக்கு 'சோட்டு' எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த கேஸ் சிலிண்டர்களை பெற இருப்பிடச் சான்று, முன்பணம் தேவையில்லை, ஏதாவது ஒரு அடையாள அட்டையை சமர்ப்பித்தால் போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்