காட்டெருமை தாக்கி 2 பேர் படுகாயம்

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-06-27 19:45 GMT

குன்னூர்

குன்னூர் அருகே செங்கல்கொம்பை கிராமத்தை சேர்ந்தவர்கள் லட்சுமணன் (வயது 63), தங்கராஜ் (45). தொழிலாளிகள். இந்தநிலையில் நேற்று 2 பேரும் கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர். புதர் மறைவில் நின்றிருந்த காட்டெருமை, திடீரென லட்சுமணன், தங்கராஜ் இருவரையும் தாக்கியது. பின்னர் காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றது. காட்டெருமை தாக்கியதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லட்சுமணன் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தங்கராஜ் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் மருத்துவமனைக்கு நேரில் சென்று படுகாயம் அடைந்தவர்களை பார்வையிட்டார். மேலும் விசாரணை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்