தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம்

கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.;

Update:2023-10-19 04:30 IST

சாணார்பட்டி அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்தவர் பிரபாகர் (வயது 21). பாறைப்பட்டியை சேர்ந்வர் அபிமன்யு (வயது 19). தனியார் நிறுவன ஊழியர்கள். நேற்று முன்தினம் மதியம் இவர்கள் 2 பேரும், பாறைப்பட்டியில் இருந்து கோபால்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை அபிமன்யு ஓட்டினார். பிரபாகர் பின்னால் அமர்ந்திருந்தார்.

கோபால்பட்டியை அடுத்த பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கார் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய காட்சி, அப்பகுதியில் உள்ள தேங்காய் குடோனில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்