லாரி மோதி 2 முதியவர்கள் பலி

ஆடுதுறையில் லாரி மோதி 2 முதியவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-10-09 20:05 GMT

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருக்கருகாவூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்தவர் மாமுண்டி (வயது 70). அதே பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). இவர்கள் 2 பேரும் ஆடுதுறை எஸ்.எஸ். நகரில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டுக்கு செல்ல பஸ்சில் வந்தனர். பின்னர் அவர்கள் பஸ்சில் இருந்து இறங்கி ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தனர்.

லாரி மோதி 2 பேர் பலி

அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக நடந்து சென்ற முதியவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில், படுகாயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்