சேவூர் பகுதியில் மேலும் 2 நாட்களுக்கு குடிநீர் வராது

சேவூர் பகுதியில் மேலும் 2 நாட்களுக்கு குடிநீர் வராது

Update: 2023-09-12 10:25 GMT

சேவூர்

சிறுமுகை நீரேற்று நிலையத்தில் மின் மோட்டார்களில் வண்டல் மண் சூழ்ந்து இருப்பதால் இன்றும் (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் சேவூர் சுற்றுவட்டார பகுதியில் ஆற்றுக்குடிநீர் வினியோகம்

நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வடிகால் வாரிய அதிகாரி கூறியதாவது:-

சிறுமுகை அருகே ஆலாகொம்பு, வேடர் காலனியில் உள்ள நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டார் மற்றும் மோட்டார் பம்பு அருகில் வண்டல் மண் சூழ்ந்து இருப்பதால், அதை அகற்றும் பணி நடைபெறுகிறது. இதனால் 249 கிராமக்களுக்கான அவினாசி, அன்னூர் மற்றும் சூலூர் ஒன்றிய கூட்டு குடிநீர் திட்டத்தில் வரும் ஆற்றுக்குடிநீர் கடந்த இரண்டு நாட்களாக நிறுத்தப்பட்டது. இன்னும் பணிகள் நிறைவு பெறாததால் மேலும் இரண்டு நாட்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடும். இதனால், சேவூர் ஊராட்சி, மற்றும் சுற்றுவட்டார பகுதியான, ஆலத்தூர், பொங்கலூர், குட்டகம், புலிப்பார், மங்கரசு வலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், பாப்பாங்குளம், வடுகபாளையம், நடுவச்சேரி, புஞ்சை தாமரைக்குளம், அய்யம்பாளையம் ஆகிய ஊராட்சி பகுதிகளில் இன்றும், நாளையும் குடிநீர் நீர் வராது.

இவ்வாறு அவர்கூறினார்.

--------------

Tags:    

மேலும் செய்திகள்