42 விவசாய குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடனுதவி நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்

42 விவசாய குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடனுதவியை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.

Update: 2022-09-27 18:45 GMT

திருப்பத்தூர்

42 விவசாய குழுக்களுக்கு ரூ.2½ கோடி கடனுதவியை நல்லதம்பி எம்.எல்.ஏ. வழங்கினார்.

திருப்பத்தூர் ஒன்றியம் ஜவ்வாது மலையில் உள்ள புதூர்நாடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் 42 விவசாய குழுக்களுக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஜவ்வாது மலையில் விவசாயிகள் நெல் மற்றும் கேழ்வரகு அரவை செய்ய புதிய அரவை எந்திரம் மற்றும் உமி, குருணை கல் நீக்கம் செய்ய ரூ.15 லட்சத்தில் வாங்கப்பட்ட எந்திரங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி புதூா்நாடு பகுதியில் நடந்தது. மேலும் விவசாயிகள் வசதிக்காக நெல் உள்ளிட்ட பொருட்களை வைக்க ரூ.25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கிடங்கு திறப்பு விழாவும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கூட்டுறவு சார் பதிவாளர் தர்மேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கோவிந்தன் வரவேற்றார். விழாவின்போது 42 விவசாய குழுக்களுக்கு கடனுதவியாக ரூ2 கோடி 50 லட்சம் வழங்கியதோடு புதிய எந்திரங்களை ஏ.நல்லதம்பி திறந்து வைத்து புதிய விவசாய கிடங்கை பூஜை செய்து ரிப்பன் வட்டி தொடங்கி வைத்து பேசினார்.நிகழ்ச்சியில் திருப்பத்தூர் ஒன்றியக்குழு தலைவர் விஜியா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர்கள் பிருந்தாவதி வைகுந்தராவ், துக்கன், ஊராட்சி மன்ற தலைவர் அலமேலு செல்வம், வார்டு உறுப்பினர் துக்கன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கூட்டுறவு சங்க தலைவர் எம்.ஆர்.அண்ணாமலை நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்