2 ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு முறைகேடு

நாகர்கோவிலில் 2 ரேஷன் கடைகளில் கலெக்டர் அரவிந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-12-10 19:00 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் 2 ரேஷன் கடைகளில் கலெக்டர் அரவிந்த் திடீரென ஆய்வு மேற்கொண்டார். இதில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேற்று நாகர்கோவிலில் உள்ள 2 ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரியவிளை பகுதியில் கலசமிறக்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் உணவு பொருட்களின் இருப்பு குறித்து கலெக்டர் அரவிந்த் நேரில் ஆய்வு மேற்கொண்டபோது அரிசி மற்றும் பருப்பு இருப்பு குறைவாகவும், சீனி கூடுதலாக இருந்ததும் தெரிய வந்தது.

இதேபோல் கோட்டார் சவேரியார் ஆலயம் அருகிலுள்ள ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடையில் அரிசி கூடுதலாகவும், பருப்பு குறைவாக இருந்ததையும் கண்டறிந்ததோடு மேலும் பயன்படுத்த இயலாத 33 மூடை அரிசியை முறைகேடாக ரேஷன் கடையில் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளின் பொறுப்பான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

ரூ.48,350 அபராதம் விதிப்பு

இதைத்தொடர்ந்து மாவட்ட வழங்கல் அதிகாரி கலசமிறக்கி குடியிருப்பு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை விற்பனையாளருக்கு ரூ.1,800 அபராதம் விதித்தார்.

ஊட்டுவாழ்மடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடையில் அரிசி கூடுதலாகவும், பருப்பு குறைவாகவும் இருந்த காரணத்தினால் ரூ.5,300 அபராதம் விதிக்கப்பட்டதோடு, மேலும் பயன்படுத்த இயலாத 33 அரிசி மூடைகள் முறைகேடாக ரேஷன் கடையில் வைத்திருந்தமைக்காக ரூ.41,250 அபராதம் என மொத்தம் ரூ.48,350 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்