குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம்

குப்பையில் கிடந்த பட்டாசுகள் வெடித்து 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-01-02 19:37 GMT

தாயில்பட்டி, 

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி பஞ்சாயத்து பெரியார் நகரை சேர்ந்த சேகர் என்பவருடைய மகன் வேலாயுதம் (வயது 9). 4-ம் வகுப்பு படித்து வருகிறான். கருப்பசாமி என்பவருடைய மகன் வைரம் (14). 9-ம் வகுப்பு மாணவன்.

இவர்கள் இருவரும் கலைஞர் காலனியில் உள்ள கல் கிடங்கில் குப்பை கழிவுகளை தீயிட்டு கொளுத்தியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த கழிவில் கிடந்த பட்டாசுகள் எதிர்பாராத விதமாக வெடித்து சிதறின. இதில் மாணவர்கள் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்