திருட்டு வழக்கில் 2 பேர் கைது
திருட்டு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் நீலமங்கலம் கூட்டுரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் கடலூர் மாவட்டம் காரைக்காடு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (வயது 54), வேப்பூர் அருகே ரெட்டக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜி மகன் சஜி (39) என்பது தெரிந்தது.
மேலும் இவர்கள் 2 பேரும் கள்ளக்குறிச்சி விநாயகா நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் வீட்டில் 400 கிராம் வெள்ளி பொருட்களையும், சின்னசேலத்தில் தினேஷ் என்பவரின் வீட்டில் 300 கிராம் வெள்ளி பொருட்களையும் திருடியதும் தெரிந்தது. இதையடுத்து குணசேகரன், சஜி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வெள்ளி பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.