ஓட்டலில் கண்காணிப்பு கேமராவை திருடிய 2 பேர் கைது
ஓட்டலில் கண்காணிப்பு கேமராவை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த அண்டர்காடு கிராமம் ஆப்பகண்ணி பாலம் அருேக ஓட்டல் நடத்தி வருபவர் ஜெகதீசன் (வயது44).. சம்பவத்தன்று இரவு இவரது கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், 6 கண்காணிப்பு கேமராக்களை உடைத்து விட்டு ஒரு கேமராவை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஜெகதீசன் அளித்த புகாரின் போரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா குணசேகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை திருடி சென்றதாக நெய்விளக்கு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (22), அண்டர்காட்டை சேர்ந்த இமானுவேல் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.