வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன்கள் திருடிய 2 பேர் கைது
வடமாநில தொழிலாளர்களிடம் செல்போன்கள் திருடிய 2 பேர் கைது
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்கள் அந்த பகுதியில் அறைகளில் தங்கியுள்ளனர். சம்பவத்தன்று தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகரை சேர்ந்த டேனியல் (வயது19), சின்னமுட்டத்தைச் சேர்ந்த அனுது (25) ஆகியோர் வடமாநில தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் புகுந்து செல்போன்களை திருடியுள்ளனர். இதுகுறித்து வடமாநில தொழிலாளர்கள் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் செல்போன்களை திருடியதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து டேனியல், அனுது ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 6 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.