கல்லூரி மாணவனிடம் 1½ பவுன் செயின் வழிப்பறி செய்த 2 பேர் கைது
அரக்கோணம் அருகே கல்லூரி மாணவனிடம் 1½ பவுன் செயின் வழிப்பறி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அரக்கோணம் செல்வ மந்தை பகுதியில் 17 வயது கல்லூரி மாணவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வழிமறித்து அவர் அணிந்திருந்த சுமார் ஒன்றரை பவுன் செயினை பறித்து சென்றுள்ளனர். இது குறித்து மாணவன் அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் பழனிவேல் வழக்குப்பதிவு செய்து விாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் செல்வமந்தை கட்டன் கூடா பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் அரக்கோணத்தை அடுத்த ராமாபுரம் பகுதியை சேர்ந்த தினகரன் (27). மற்றும் மாரிமங்களம் பகுதியை சேர்ந்த ஹரிபாபு (22). என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து செயின் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.