வாலிபரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-31 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் சற்குண ராஜ் (வயது 26). இவர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த 18 வயது வாலிபர், சிகரெட் பிடித்து புகை விட்டதாக தெரிகிறது. அவரை அங்கிருந்து செல்லுமாறு சற்குணராஜ் குடும்பத்தினர் கூறி உள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.

இதன் பின்னர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த சற்குண ராஜை வாலிபரும், அவரது 17 வயது தம்பியும் வழிமறித்து கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் மற்றும் அவரது தம்பி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்