விழுப்புரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது

விழுப்புரம் அருகே பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-05 18:45 GMT

செஞ்சி, 

விழுப்புரம் அருகே உள்ள ஓட்டேரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி சத்யா (வயது 29). சம்பவத்தன்று இவர் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி நோக்கி ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். குண்டலப்புலியூர் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சத்யா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கவினா தலைமையில், குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சத்யாவிடம் தங்க சங்கிலியை பறித்தது திருவண்ணாமலையை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் முபாரக் (30), சாகித் அலி மகன் பாரூக் அப்துல்லா (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்