ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நெல்லை அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நெல்லை அருகே மேல முன்னீர்பள்ளம் பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில் 18 மூட்டைகளில் 720 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தருவை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்ற குமார் (வயது 26), சுத்தமல்லியைச் சேர்ந்த இசக்கிமுத்து (24) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.