ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் சூரியா தலைமையிலான போலீசார் இளையனார்குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சாராயம் விற்பனை செய்த அதே கிராமத்தை சேர்ந்த நாட்டான் மகன் கணபதி (வயது 26) மற்றும் ஏழுமலை மனைவி தேவகி (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 30 லிட்டர் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.