மது விற்ற 2 பேர் கைது; 90 மதுபாட்டில்கள் பறிமுதல்

மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டு, 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-03 18:48 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர், கோரியம்பட்டி, வாரியங்காவல் உள்ளிட்ட பகுதிகளில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அப்பகுதியில் 2 பேர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது, அவர்கள் இலையூர் மேலவெளி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன்(வயது 49), இலையூர் கோரியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம்(51) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 90 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்