கஞ்சா விற்ற 2 பேர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-09 18:45 GMT

தூத்துக்குடி தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் சிப்காட் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை நடு கூட்டுடன்காட்டை சேர்ந்த மகராஜன் என்ற மனோஜ் (வயது 26), புதுக்கோட்டை அய்யனார் காலனியை சேர்ந்த கந்தசாமி கார்த்திக் (25) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, ரூ.650 ரொக்கப்பணம், 2 செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்