கஞ்சா விற்ற 2 பேர் கைது

நெல்லையில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-24 20:56 GMT

பேட்டை:

நெல்லை பழைய பேட்டை கிருஷ்ணகிரி தெற்கு தெருவை சேர்ந்தவர் மகாராஜன் மகன் பெரிய ராஜா (வயது 26). இவர் பேட்டை - பழைய பேட்டை இணைப்பு சாலையில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். தகவல் அறிந்ததும் பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரியராஜாவை கைது செய்தனர். இதேபோல் பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது பொதிகை நகர், ஆனைக்குளம் பகுதியில் கஞ்சா விற்றதாக பழையபேட்டை, சாரதாபுரத்தை சேர்ந்த அருண் (20) என்பவரை கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்