கொல்லங்கோடு:
நித்திரவிளை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி தலைமையிலான போலீசார் கலிங்கராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த பகுதியில் கேரள பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் ஒன்று நின்றுள்ளது. மேலும் அதன் அருகே 2 வாலிபர்கள் கையில் பொட்டலத்துடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். இதில் அவர்களிடம் 140 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் இருவரும் கேரள மாநிலம் பொழியூர் பகுதியை சேர்ந்த ரதீஷ் (வயது 25), நிஷான் என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 2 பேரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.