அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 2 பேர் கைது
அனுமதியின்றி பட்டாசு திரி தயாரித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் அதே பகுதியில் உள்ள போடுரெட்டியப்பட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் சிவகாசியை சேர்ந்த நீராத்துலிங்கம் (வயது 55), மாடசாமி (31) ஆகியோர் உரிய அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் திரிகளை தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், திரிகளை பறிமுதல் செய்தனர்.