மூதாட்டியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது

மேலூர் அருகே மூதாட்டியை தாக்கி நகை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-31 20:16 GMT

கொட்டாம்பட்டி, 

மேலூர் அருகே உள்ள வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி சரோஜா (வயது 65). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்க கேட் கதவை பூட்டி விட்டு வராண்டா பகுதியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், கேட்டை தாண்டி உள்ளே சென்று சரோஜாவை சரமாரியாக தாக்கியதுடன் அவர் அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் மயங்கி கிடந்த மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சரோஜா கொடுத்த புகாரின் பேரில் கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மனோஜ், வன்னிமுத்து ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்