பெண்ணை தாக்கிய 2 பேர் கைது

பெண்ணை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-05 18:59 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கொட்டாரக்குன்று கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி(வயது 40). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வேலு(29), ரவிச்சந்திரன்(43) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் முத்துலட்சுமியையும், அவரது உறவினர்களையும் வேலு, ரவிச்சந்திரன் மற்றும் சிலர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த முத்துலட்சுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத் கண்ணா வழக்குப்பதிவு செய்து வேலு, ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்