வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

பாளையங்கோட்டை அருகே வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-19 19:51 GMT

வல்லநாடு, முத்தாரம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், நெல்லை டவுண் வயல் தெருவை சேர்ந்த இசக்கிவிஜய் (24), வையாபுரிநகரை சேர்ந்த வெற்றிச்செல்வன் (32) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிவா சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை அரியகுளம் கல்லூரி அருகே வந்தபோது இசக்கிவிஜய், வெற்றிச்செல்வன் ஆகிய இருவரும் வழிமறித்து அவரை தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்