வாலிபரை தாக்கிய 2 பேர் கைது

வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-08-13 18:45 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் ரஞ்சித்குமார் (வயது 27). இவர் தனது மாமா முனுசாமி மற்றும் நண்பர் விக்னேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். எருமனூர் அரசு உயர்நிலைப் பள்ளி அருகில் சென்றபோது, அங்கு அதேபகுதியை சேர்ந்த ஆகாஷ், கிருஷ்ணன், நவீன், நாச்சியார்பேட்டையை சேர்ந்த மதியழகன் (22), ஹரிகிருஷ்ணன் (22) உள்பட 6 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நவீன் தரப்பினர் ஒன்று சேர்ந்து, ரஞ்சித்குமாரை திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ரஞ்சித்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் நவீன், கிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதில் மதியழகன், ஹரிகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்