சலூன் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
சலூன் கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
புதூர்,
மதுரை சத்திரப்பட்டி போலீஸ் சரகம் காஞ்சாரம்பேட்டையை அடுத்த சின்னபட்டியை சேர்ந்தவர் நிதிமாறன் (வயது 55). சலூன் கடை வைத்து உள்ளார். சம்பவத்தன்று இவரது கடை முன்பு சிலர் குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர் சத்திரப்பட்டி போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த நிலையில், 2 பேர் நிதிமாறன் வீட்டுக்குள் புகுந்து அவரையும், அவரது மனைவி, மகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சந்திரசேகரன்(55), கார்த்திக்(22) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.