வக்கீலை தாக்கிய 2 போ் கைது

வக்கீலை தாக்கிய 2 போ் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-13 18:35 GMT

 கரூர் 5 ரோட்டை சேர்ந்தவர் நீளம்ரகுவரன் (வயது 24 ). வக்கீல். இந்தநிலையில், அதே பகுதியை சேர்ந்த இலஞ்சியன் (30), ராமகிருஷ்ணன் (28), கார்த்திக், பாலு ஆகிய 4 பேரும் சேர்ந்து நீளம் ரகுவரனின் தாய் - தந்தையரை, தகாத வார்த்தையால் திட்டி மிரட்டி உள்ளனர். இதனை நீளம் ரகுவரன் தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த இலஞ்சியன் உள்பட 4 பேரும் சேர்ந்து நீளம்ரகுவரனை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்த புகாரின்பேரின், கரூர் டவுன் போலீசார் இலஞ்சியன், ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்