செம்பட்டி அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய 2 பேர் கைது

செம்பட்டி அருகே தொழிலாளியை பீர்பாட்டிலால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-31 18:45 GMT

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்தவர் குமரவேல் (வயது 40). கூலித்தொழிலாளி. செம்பட்டியை சேர்ந்தவர் ஹரிஹரன் (30). திருப்பூரை சேர்ந்தவர்கள் விஜய் (25), சதீஷ். இவர்கள் 4 பேரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு இவர்கள், செம்பட்டி அருகே புதுகோடாங்கிபட்டி அரசு மதுபான கடை பின்புறத்தில் திறந்தவெளியில் அமர்ந்து மதுபானம் குடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகரன், விஜய், சதீஷ் ஆகியோர் சேர்ந்து குமரவேலை பீர்பாட்டிலால் வயிறு, தொடை பகுதிகளில் சரமாரியாக குத்தினர். மேலும் அவரது தலையிலும் தாக்கி விட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடி விட்டனர். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த குமரவேலை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிகரன், விஜய் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண்கள், மாணவிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ள அந்த மதுபான கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று கடந்த 1-ந்தேதி நடந்த கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்